ஆடிப் பட்டம் தேடி விதைக்க
ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்க
மாற்று உண்டா மறுப்புண்டா
கூற்றெனக் கூறுவது கேள்
மாதத்தில் சிறந்தது எதுவென்பின்
முன்பனி பின்பனி மூன்றென்பேன்
மனிதன் படைத்த பகுப்புகளில்
சிறப்பென்ன சிந்தனை செய்
எல்லாம் தெரிந்த நல்லோரே
ஆட்சி மாற சட்டம் மாற
ஆளும் கட்சி ஆரவாரம் செய்ய
கேள்வி கேட்க்கும் கோணாங்கி யாரோ?
தொடர்ந்தது தொடர்வதில் தவறில்லை
இடையில் மாற்றம் புதியனப் புகுந்தது
கேள்விக் கேட்க்கும் கோணாங்கி
சுனங்கிய வேளை சட்டம் எனவாக
சுனக்கம் தெளிய ஆட்சியிலமர்ந்து
வணக்கம் கூறி சுற்றிப் பார்க்க
முந்தைய ஆட்சி முதுகில் குத்த
அதிகாரம் கொண்டு சட்டமதை சொன்னது
ஆன்றோர் சான்றோர் அடங்கியிருக்க
வென்றது ஆளும் கட்சியென்றது
பீடத்தை பிடித்த கோணாங்கி பிதற்ற
மாற்று சட்டம் மன்றத்திலேற்ற
மறுக்க எதிரியில்லா மன்றமென
மீண்டும் சித்திரை வழக்கமென
அக்னிவேளை மன்றத்தில் அரங்கேறியவேளை
அடிவருடும் அற்பர் சிலரும் ஆர்ப்பரிக்க
விரலில் மை வைத்து மயக்கி
வாக்குக்கு மட்டும் உரிமையுண்டு
எதிர்ப்பென எழுந்தால் எரிக்கும்
அவரவர் காத்திருக்கும் அடுத்தவேளை
மக்களாட்சி கோமாளி வாழ்க்கையென
ஊருடன் பகைக்க மனமில்லா பெருந்தகை
ஆளும் வர்க்கம் ஆட்டும் வர்க்கம்
வேடிக்கை என்பது வாடிக்கையே
சித்திரை வந்தால் முத்திரையென்பார்
தையது வந்தால் தையலென்பார்
பையது நிறைக்கும் பதத்தால்
மெய்யெது பொய்யெதுவென அறியார்
தையென்றாலும் சித்திரையென்றாலும்
மெய்யதுழைக்க வயிறது நிறைய
வாழும் வாழ்க்கை வளமுடனிருக்க
தன் கையை நம்பி வாழும் மக்கள்
ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்க
மாற்று உண்டா மறுப்புண்டா
கூற்றெனக் கூறுவது கேள்
மாதத்தில் சிறந்தது எதுவென்பின்
முன்பனி பின்பனி மூன்றென்பேன்
மனிதன் படைத்த பகுப்புகளில்
சிறப்பென்ன சிந்தனை செய்
எல்லாம் தெரிந்த நல்லோரே
ஆட்சி மாற சட்டம் மாற
ஆளும் கட்சி ஆரவாரம் செய்ய
கேள்வி கேட்க்கும் கோணாங்கி யாரோ?
தொடர்ந்தது தொடர்வதில் தவறில்லை
இடையில் மாற்றம் புதியனப் புகுந்தது
கேள்விக் கேட்க்கும் கோணாங்கி
சுனங்கிய வேளை சட்டம் எனவாக
சுனக்கம் தெளிய ஆட்சியிலமர்ந்து
வணக்கம் கூறி சுற்றிப் பார்க்க
முந்தைய ஆட்சி முதுகில் குத்த
அதிகாரம் கொண்டு சட்டமதை சொன்னது
ஆன்றோர் சான்றோர் அடங்கியிருக்க
வென்றது ஆளும் கட்சியென்றது
பீடத்தை பிடித்த கோணாங்கி பிதற்ற
மாற்று சட்டம் மன்றத்திலேற்ற
மறுக்க எதிரியில்லா மன்றமென
மீண்டும் சித்திரை வழக்கமென
அக்னிவேளை மன்றத்தில் அரங்கேறியவேளை
அடிவருடும் அற்பர் சிலரும் ஆர்ப்பரிக்க
விரலில் மை வைத்து மயக்கி
வாக்குக்கு மட்டும் உரிமையுண்டு
எதிர்ப்பென எழுந்தால் எரிக்கும்
அவரவர் காத்திருக்கும் அடுத்தவேளை
மக்களாட்சி கோமாளி வாழ்க்கையென
ஊருடன் பகைக்க மனமில்லா பெருந்தகை
ஆளும் வர்க்கம் ஆட்டும் வர்க்கம்
வேடிக்கை என்பது வாடிக்கையே
சித்திரை வந்தால் முத்திரையென்பார்
தையது வந்தால் தையலென்பார்
பையது நிறைக்கும் பதத்தால்
மெய்யெது பொய்யெதுவென அறியார்
தையென்றாலும் சித்திரையென்றாலும்
மெய்யதுழைக்க வயிறது நிறைய
வாழும் வாழ்க்கை வளமுடனிருக்க
தன் கையை நம்பி வாழும் மக்கள்
இந்த தளத்துல இருக்குற பய,புள்ளைங்க, நடுத்தர வயசு,பெரியவுங்க எல்லாரும் வந்து நீங்க யாருன்னு சொல்லிட்டு போயிடுங்க.(கூப்புடுர பேரு,வயசு,ஊரு,என்ன பண்றீங்க,விருப்பம் இருந்தா கைபேசி எண்).
ReplyDeleteவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்... அன்புடன் மகேஸ்.
ReplyDelete